Monday, April 24, 2017

வடமராட்சியில் 67 பேருக்கு டெங்கு!

வடமராட்சியில் டெங்கின் தாக்கத்துக்கு உள்ளான 67 பேருக்கு மேற்பட்டோர் இனங்காணப்பட்டுள்ளதாக கர வெட்டி சுகாதார வைத்திய அதிகாரி எஸ். சுதோஸ்குமார் தெரிவித்தார்.

வடமராட்சி பகுதியில் டெங்கின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் கொழும்பு  சென்று வருபவர்களுக்கு அநேகமாக டெங்கு தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.                                         

No comments:

Post a Comment