துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான வேளை பின்னால் வந்த முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிள் மேல் ஏறி தலை கீழாகப் புரண்டதில் நான்கு பேர் படுகாயங்களிற்குள்ளாகினர்.
இதில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மந்திகை மடத்தடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த அல்வாய் கிழக்கை சேர்ந்த ஆறு முகம் நடராசா (வயது 71) என்ற வயோதிபர் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த அளவெட்டியைச் சேர்ந்த கிருபாலசிங்கம் திலக்சன் (வயது 22) மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த அம்பன்-குடத்தனையைச் சேர்ந்த சகோதரர்களான ரவீந்திரநாதன் ஜெய கரன் (வயது 20) ரவீந்திரநாதன் ஜெனரதன் (வயது 17) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் மூவர் சிறுகாயம் அடைய நேரிட்டது. இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment