Thursday, April 20, 2017

இறைச்சியை எடுத்துச் சென்றவர் வடமராட்சியில் கைது!

அனுமதிபத்திரம் இன்றி 30 கிலோ கிராம் இறைச்சியை எடுத்துச் சென்ற நபர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கலிகை சந்தி பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதிக்கு இறைச்சி கொண்டுவரப்படுவதாக பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் மந்திகை பகுதியில் சிவில் உடையில் காத்திருந்த பொலிசார் சந்கேத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த துவிச்சக்கிர வண்டியை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி இறைச்சியை எடுத்துச் சென்றமை கண்டு பிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment