Sunday, April 16, 2017

வடமராட்சியில் இருவர் சடலமாக நேற்று மீட்பு!

வடமராட்சியில் நேற்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட் பட்ட புலோலி திகிரி பகுதியில் 57வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து  காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணையை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.  இதேவேளை நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் 19 வயது யுவதி ஒருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணையை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.   இருவரது சடலங்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment