Friday, April 14, 2017

சோளங்கள் விளையாட்டு கழகத்தின் புத்தாண்டு கொண்டாட்டமும் விளையாட்டு போட்டியும்!

இன்றையதினம் சோளங்கன் சனசமூக முன்றலில் சோளங்கன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டி இடம்பெற்றது. [மேலதிக படங்கள் உள்ளே]


ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தில் சிறார்களிற்கு ஊக்கமளிக்கும் முகமாக இடம்பெறும் இவ் விளையாட்டு போட்டியில். சிறார்களிற்கான பணிஸ் உண்ணுதல், சிறார்களிற்கான ஒட்டப்போட்டி, பெண்கள், ஆண்களிற்கான கிடுகு பின்னல், பெண்களிற்கான தேங்காய் திருவுதல், இளைஞர்களிற்கான தலையணை எறிதல் போட்டி நிகழ்வு போன்று பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இன்று மாலை இடம்பெற்ற இவ் நிகழ்வில் சிறுவர், பெரியவர், முதியவர் என்று சோளங்கன் மண்ணி;ன் மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

[இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்களின் மேலே கிளிக் செய்வதன் மூலம் தெளிவாக பார்க்க முடியும்.]





No comments:

Post a Comment