Wednesday, March 29, 2017

துன்னாலையில் வாள்வெட்டு: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

வடமராட்சி துன்னாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் இடம்பெற்ற வாள்வெட்டிற்கு இலக்கான மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள இரு பகுதியினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் கோஷ்டி மோதலாக மாறியுள்ளது. இதில் வாள்வெட்டிற்கு இலக்கான மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை செய்து வந்த நெல்லியடிப் பொலிஸார், அதே இடத்தைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்தனர். அவர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

No comments:

Post a Comment