தொண்டைமனாறு பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.
மேற்படி பகுதியில் உள்ள 14வயது சிறுமியை 24வயது இளைஞன் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞரை நேற்று நீதிமன்றதில் முற்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment