Wednesday, March 29, 2017

வடமராட்சி செம்பியன்பற்றில்27 பவுண் தங்க நகை கொள்ளை!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் நேற்று அதிகாலை தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.  

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வீட் டிலிருந்தவர்கள் வழமை போன்று காலை எழுந்து சுவாமி அறைக்குள் சென்ற போதே மேற்படி திருட்டு இடம்பெற்றது தெரியவந்துள்ளது. சுவாமி அறையின் பின்பக்க யன்னலின் கம்பியை வளைத்து உள்நுழைந்தே அறையில் இருந்த சுமார் 14  லட்சம் பெறுமதியான 27 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 

கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றபோது வீட்டிலிருந்தவர்கள் ஏனைய அறைகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக தடயவியல் பிரிவு பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் நேற்று மாலை விசாரணை களை மேற்கொண்டனர்.        

No comments:

Post a Comment