![]() ![]() |
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொலித்தீன் பாவனையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுதோஸ்குமார் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் உணவுச்சாலைகளில் பிளாஸ்ரிக் கப்பிற்கு பதிலாக சில்வர் கப்பினையும். லஞ்சீற்றுக்கு பதிலாக வாழை இலைகளை பயன்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் வீடுகளில் சேரும் பிளாஸ்ரிக் பொருட்களை ஒரு இடத்தில் சேகரித்து வைத்து பிரதேச சபைகளின் வாகனங்கள் மூலம் அகற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயன்றவரை பிளாஸ்ரிக் உபயோகத்தினை குறைப்பதனுடாக எதிர்காலத்தில் அதனை இல்லாமல் செய்வதற்கான சூழல் உருவாகும் என அவர் குறினார்.


No comments:
Post a Comment