இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் வாள்வெட்டிற்கு இலக்கான இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் அல்வாய் வடக்கு மகாத்மா வீதிப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து கார்த்திகேசு சந்திரன் (வயது-40) என்பவர் வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் இடம்பெற்ற மோதலில் வாள்வெட்டுக்கு இலக்காகி கு.கந்தசாமி (வயது-71) என்பவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment