நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த சிறுமி ஒருவர் காணமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த 16வயது சிறுமி ஒருவர் காணமல் போயுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆண் ஒருவருடன் சேர்ந்திருந்ததாக தெரிவித்து நெல்லியடி பொலிஸாரால் அச் சிறுமி பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவுக்கமைய திருநெல்வேலியில் அமைந்துள்ள நம்பிக்கை இல்லத்தில் மேற்படி சிறுமி சேர்க்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு சேர்க்கப்பட்ட சிறுமி கடந்த சனிக்கிழமை காலையில் இருந்து காணமல்போயுள்ளார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment