Monday, March 13, 2017

வடமராட்சியில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கி இறந்ததாக தெரிவித்து சிறுவன் ஒருவனது சடலம் நேற்று மதியம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னாலை வடக்கைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத போது சுருக்கிட்டு கொண் டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன் தயான் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

தடயவியல் பொலிஸார் தடயங்களை பதிவு செய்ததுடன் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.                              

No comments:

Post a Comment