Friday, March 10, 2017

வடமராட்சி பகுதியில் வர்த்தகர் மீது தாக்குதல்

கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மூவர் கொண்ட குழு கடும் தாக்குதல் மேற் கொண்டதில் பாதிக்கப்பட்ட வர்த்தகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 8.30  மணியளவில் மந்திகை துறையாமூலைப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த எஸ். செந்தில்குமரன் (வயது-32) என்பவரே தாக்குதலுக்குள்ளானவராவார்.

மந்திகைப் பகுதியில் உள்ள தமது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை துறையாமூலைப் பகுதியில் வைத்து வழிமறித்து இனம் தெரியாத மூவர் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பருத்தித்துறை பொலிஸிலும் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.    

No comments:

Post a Comment