Wednesday, March 1, 2017

வடமராட்சி புட்டளை பகுதியில் வீடு உடைக்கப்பட்டு நகைகள் பணம் திருட்டு!

வடமராட்சி புற்றளைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றினைப் பட்டப்பகல் வேளையில் உடைத்த திருடர்கள் அங்கிருந்து 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 19 1/2 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. 

பிற்பகல் 1.30 மணியளவில் புற்றளை புலோலி தெற்கைச் சேர்ந்த வசந்தாதேவி என்பவரின் வீட்டில் இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உள்ளோர் வெளியில் சென்றதை சாதகமாகப் பயன்படுத்தி முன்பக்கக் கதவை உடை த்து உள்நுழைந்த திருடர்கள் சாமியறைக்குள் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் திருடியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பருத்தித்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.                      

No comments:

Post a Comment