விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் அதி சக்தி வாய்ந்த 78 குண்டுகளை வடமராட்சி பகுதியிலிருந்து மீட்ட விசேட அதிரடிப் படையினர் அவற்றை செயலிழக்கச் செய்துள்ளனர்.
வடமராட்சி வதிரி புலவனோடைப் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை காணி ஒன்றில் தென்னம்பிள்ளைக்கு கிடங்கு வெட்டியபோது வெடிபொருள் ஒன்று தென்பட்டது. இதனையடுத்து அப்பணி நிறு த்தப்பட்டு நெல்லியடிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் வருகை தந்து விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதி முன்னர் விடுதலைப் புலிகளின் முகாமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவினைப் பெற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதி தோண்டி சோதனையிடப்பட்டது.
அப்போது விடுதலைப் புலிகளினால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 78 குண்டுகள் மீட்கப்பட்டது.
இக் குண்டுகள் TNT வெடி மருந்துகள் கொண்டு நிரப்பப்பட்டு தயாரிக்கப்பட்ட அதி சக்தி வாய்ந்ததும் ஆபத்தானதுமான வெடி பொருள் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இவை நேற்று பிற்பகல் செயலிழக்கச் செய்யப்பட்டது எனவும் பொலிஸார் பின்னர் தெரிவித்திருந்தனர்.

No comments:
Post a Comment