நெல்லியடி நகரில் கலப்படம் செய்த தேனை விற்பனை செய்தவருக்கும் அதனை வாங்கி வர்த்தக நிலையத்தில் வைத்திருந்தவருக்கும் தலா 3000 ரூபா வீதம் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வர்த்த நிலையம் ஒன்றில் மரீனா தேன் கண்டு பிடிக்கப்பட்டது.
அதனை பகுப்பாய்வு செய்தததில் அது கலப்படம் செய்யப்பட்ட தேன் என தெரியவந்ததையடுத்து வர்த்தக நிலையத்தில் வைத்திருந்த வர்த்தகருக்கும் அதனை விற்றவருக்கும் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 3000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment