Sunday, March 26, 2017

சந்திரிக்காவின் வரவிற்காக காத்திருந்து ஏமாந்த வடமராட்சி மக்கள்!

சந்திரிக்காவின் வரவிற்காக இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். வடமராட்சி தொண்டைமனாறு பகுதியில் உள்ள குளத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இரண்டு மணித்தியாலங்களாக கால் கடுக்க நின்றவர்கள் பெரும் ஏமாற்றம் அடைய நேரிட்டுள்ளது.

இதைவிட பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், மோப்ப நாய் கொண்டுவந்தும் சோதனையிடப்பட்டது. தொண்டைமானாற்று பகுதியில் சிறிய பற்றைகள் காணப்பட்டதகால் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.

வீதிகளில் போக்குவரத்து பொலிஸார் நெடுநேரமாக காவல் நின்றிருந்தனர். இந் நிலையில் சந்திரிகா வரமாட்டார் என தெரிவிக்கப்பட்டதையடுத்து போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment