கரணவாய் நாவலர் மடத்தடியில் மோட்டார் சையிக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் கரணவாயைச் சேர்ந்த 29வயதுடைய சோ.ராகவன் மற்றும் 46 வயதுடைய இ.சேதுலிங்கம் (சமரபாகு) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பான பக்கமாக இருந்து வந்து கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியுடன் அதே பக்கமாக வந்த மோட்டார் சையிக்கிள் மோதி பின்னர் வீதியால் சென்றுகொண்டிருந்த பேரூந்துடன் மோதி வீதியில் மருங்கில் தூக்கி வீசப்பட்ட நிலையில் பிரஸ்தாப நபர்கள் இருவரும் படுகாயமடைய நேரிட்டது. இது தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment