Thursday, February 23, 2017

வடமராட்சி முள்ளி பகுதியில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வடமராட்சி முள்ளிப் பகுதியில் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களுக்கான விசாரணை அடுத்த மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

06.03.2014 அன்று முள்ளிப்பகுதியில் வைத்து யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரில் இருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப் பட்டனர். இதில் ஒருவர் தலைமறைவாகியிருந்தார்.

இவ்வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அப்போது சந்தேக நபர்கள் இருவரும் தாம் சுத்தவாளிகள் எனக் கூறியதையடுத்து இவர்களிற்கான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 3-ம் திகதி தொடக்கம் 8-ம் திகதி  வரை இடம்பெறும் என மேல் நீதி மன்றம் அறிவித்தது. அத்துடன் தலைமறைவான மற்றைய நபருக்கு பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டது.                 

No comments:

Post a Comment