Tuesday, February 7, 2017

வல்லை நாற்சாந்தியில் வாகன விபத்து மூவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்!

தொண்டைமானாறு சந்தியில் பஸ்வண்டியும் ஹன்ரர் வாகனமும் விபத்துக்குள்ளாகி ஹன்ரர் அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்ததில் அதில் பயணித்த மூவர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுத் திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற இவ்விபத்துத் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மண்டான் பகுதியில் இருந்து தொண்டைமானாறு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்வண்டியும் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஹன்ரர் வாகனமும்  தொண்டைமானாற்றுச் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் பஸ்வண்டியின் கண்ணாடிகள் உடைந்ததுடன்  ஹன்ரர் வாகனம் வீதியின் மருங்கில் இருந்த இடத்தினைக் குறிப்பிடும் கல்லை உடைத்துக் கொண்டு வீதியைவிட்டு விலகி சென்று அருகில் இருந்த பாதுகாப்பற்ற  கிணற்றுக்குள் முன்சக்கரங்கள் பாய்ந்து பலத்த சேதமடைந்து  காணப்பட்டது.

இவ்விபத்தில் ஹன்ரரில் பயணித்த கொழும்பைச் சேர்ந்த எல்.எல்.பத்மசிறி (வயது56), பாணாந்துறையைச் சேர்ந்த முகமது பனசூன் (வயது38), கல்முனையைச் சேர்ந்த சல்மீன் முகமது முகாப்டின் (வயது20) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


No comments:

Post a Comment