மேற்கு ஆபிரிக்கா நாடாகிய கானா நாட்டின் சிறந்த ஏற்றுமதி தொழில் அதிபர்களிற்கு வழங்கப்படுகின்ற சனாதிபதி உயர் விருது நம் நாட்டு ஏன் எமது கிராமத்துக்கு அண்டைய கிராமத்து நண்பருக்கும் எமது பள்ளியின் பழைய மாணவ மைந்தனுக்கும் கிடைத்ததன் மூலம்இ தமிழர்கள் இருவர் கானா நாட்டில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் மற்றையவர் எமது கிராமத்துக்கு அண்டைய கிராமத்தைச்(கரணவாய்) சேர்ந்த கந்தசாமி குகதாசன் அவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் நெல்லியடியில்; பிரபலமான வாகன திருத்துமிடத்தை வைத்திருந்த Garage கந்தசாமி அவர்களின் புதல்வராவர். 2000ம் ஆண்டு முதல் கானா நாட்டில் விவசாய மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுடன் டூரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக கானா நாட்டிற்கு ஏற்றுமதி மூலம் அந்நிய செலவாணியை பெற்றுக்கொடுக்கின்ற முன்னணி தொழிலதிபர்களாக மேற்படி இருவரும் திகழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த வருடம் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிபதக்கத்தை பெற்றுக்கொண்ட இவர்கள்” இவ்வாண்டு கானா நாட்டு தொழிலதிபர்கள் அனைவரையும் பின்தள்ளி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இதனால் கானா நாட்டில் வருடந்தோறும் வழங்கப்படுகின்ற சனாதிபதி விருது மற்றும் தங்கப்பதக்கம் என்பனவற்றை இவர்கள் இவ்வாண்டு பெற்று முதல்தர ஏற்றுமதியாளர்கள் என்ற சாதனையை கடல் கடந்துஇ கண்டம் விட்டு கண்டம் கடந்தும் சாதனை படைத்துள்ளார்கள். எமது மண்ணிற்கும் எமது கிராமத்துக்கும் நாம் ஒன்றாய் கற்ற பள்ளிக்கும் பெருமைசேர்த்த குகதாசன்(குகன்) அவர்கட்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
No comments:
Post a Comment