Sunday, December 11, 2016

கரவெட்டி மேற்கில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுளைந்து தொபைசியை உடைத்து நொருக்கியவர் 14,000 ஆயிரம் தண்டப்பணம் செலுத்தினார்!

கரவெட்டி மேற்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து தொலை பேசியை உடைத்ததுடன் அவர்களின் காணிக்குள் புகுந்து குற்றம்  புரிந்த இருவரையும் பாதிக்கப்பட்ட நபருக்கு நட்டஈடாக 14 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் குற்றப்பணமாக 500 ரூபாய் வீதமும் செலுத்துமாறும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டார்.

நெல்லியடியில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவ்விருவரையும் பாதிக்கப்பட்ட நபருக்கு 14 ஆயிரம் ரூபாய் நட்ட ஈடும் குற்றப் பணமாக 500 ரூபாய் வீதமும் விதித்தார். குற்றப் பணத்தைச் செலுத்தத் தவ றின் மூன்றுமாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment