Saturday, June 11, 2016

வல்லையில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டதில் இருபவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டதில், ஆட்டோ சாரதியான அல்வாயை சேர்ந்த 62 வயதுடைய தம்பைய்யா பஞ்சலிங்கம் மற்றும் கரணவாயை சேர்ந்த 53 வயதுடைய உதயன் வசந்தகுமாரி ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் மந்திகை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


கடந்த வெள்ளிக்கிழமை(10.06.2016) பிற்பகல் 01:00 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் மேற்படி ஆட்டோ உப்பு வல்லைக்கும் புறாப்பொறுக்கிக்குமிடைப்பட்ட பகுதியிலேயே ஆட்டோ தூக்கிவீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment