பருத்தித்துறை, நெல்லியடி, கொடிகாமம், சாவகச்சேரி,தெல்லிப்பளை, அச்சுவேலி போன்ற பகுதிகளில் ஈடுபட்டு வந்த கொள்ளை தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றையதினம் சரணடைந்தார்.
அண்மையில் சுண்ணாகம் பகுதியில் வைத்து கொள்ளை குழுவினர் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தமது குழுவின் தலைவராக வேம்படி, துன்னாலை சேர்ந்த 32 வயதுடைய சீக்கியன் என்பவரே என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இவரை தேடி பொலிஸார் தேடுதலை மேற்கொண்டபோதும், யாழ்ப்பாண பகுதியில் தலைமறைவாக இருந்துவந்துள்ள நிலையில்.
முன்பு ஒருமுறையும் இவ்வாறான கொள்ளை நடவடிக்கை சம்பந்தமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பருத்தித்துறை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட மேற்படி சீக்கியன் என்பவருக்கு பிணை நின்றவரை கோரிய நீதிமன்றம் அவரை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு விடுத்த கோரிக்கையடுத்தே கொள்ளை குழுவின் தலைவர் சட்டத்தரணி ஊடாக நேற்றையதினம் பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைந்தார்.

No comments:
Post a Comment