கரணவாய் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை உடைத்து பால்மா,பிஸ்கட் உட்பட மேலும் பல பொருட்கள் அடங்கலாக 50,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மேற்படி வர்த்தக நிலையத்தின் கூரையின் ஒட்டினை பிரித்து உள்நுளைந்தே இவ் திருட்டினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ் சம்பவம் குறித்து நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment