யாழ் கரணவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து சோளங்கன் நூல் நிலையத்தை ஊடறுத்து மண்டான் உப தபால் நிலையம் ஊடாக துன்னாலை வீதி(உப்புறோட்) அடையும் பாதை செப்பனிடும் பணியிலேயே பிரதேச செயலகம் ஈடுபட்டுள்ளது. வீதி அகலப்படுத்தப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வேலி, மதில்கள் உடைக்க வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே வீதிக்காக தமது காணியில் சில அடியை விட்டு கொடுத்து தமது எல்லையை அறுக்கையாக்கி கொண்டவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் வீதிக்குரிய காணிக்குள் வேலிகள், மதில்களை கட்டியவர்கள் மதில்களை உடைத்தும் வேலியை அகற்றியும் உள் நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment