வடமராட்சி மண்டான் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பணம்இ நகை அட ங்கிய கைப்பை ஒன்று அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இம் முறைப்பாட்டினை கரவெட்டியைச் சேர்ந்த வாசன் வர்ணா என்ற இளம் குடும்பப் பெண் பதிவு செய் துள்ளார். நேற்று திங்கட்கிழமை மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கரவெட்டியில் இருந்து கள்வியங்காட்டிற்கு செல்வதற்காக மேற்படி பெண் மோட்டார் சைக்கிளில் கரவெட்டி உப்பு றோட் வழியாக மண்டான் வீதிக்கு சென்று கொண்டிருந்த போது12.45 மணியளவில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கரவெட்டியிலிருந்து கல்வியங்காட்டுக்குச் செல்வதற்காக மேற்படி பெண் மோட்டார் சைக்கிளில் கரவெட்டி உப்பு றோட் வழியாக மண்டான் வீதிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அவ்வேளை பின்னால் மோட்டார் சைக்களில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்துவந்த இருவர் தனது தோளில் இருந்த கைப் பையினை திடீரென அறுத்துச் சென்றதாக அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் அக் கைப்பையினுள் 28 1/2 பவுண் தங்க நகைகளும் ஒரு டிஜிட்டல் கமரா, 12 ஆயிரம் ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய பணம் 300 டொலர் என்பன இருந்ததாக அப் பெண் நெல்லியடி பொலி ஸில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment