Friday, January 22, 2016

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கப்பூது கிளையை உடன் திறக்குமாறு மக்கள் கோரிக்கை!

உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளையை மீளவும் திறக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி சங்கத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற பாரிய திருட்டினை தொடர்ந்து மேற்படி சங்கம் பூட்டப்பட்டது. 


சங்கம் பூட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பொருட்களை வாங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நெல்லியடி, ஆவரங்கால் போன்ற பகுதிகளிற்கு செல்லவேண்டியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment