Saturday, January 2, 2016

சோளங்கன் இணையத்தின் சார்பான ஒர் அறிவித்தல்!

நாம் இவ் இணையத்தினை நடாத்துவது குறித்தும் முகப்பக்கம் நடாத்துவது குறித்து சிலருக்கு ஆதாங்கம் உண்டு. நாம் சோளங்கன் எனும் பெயரில் இணையம் ஆரம்பித்ததன் பின்னர்தான் மாற்று இணையங்களை சோளங்கன் எனும் பெயரில் உருவாக்கியுள்ளனர்,இவ் பணியை நாம் தொடங்கிய பின்னர்தான் வெளிநாடுகளில் உள்ள ஊடாகங்களில் "மண்வாசனை" எனும் நிகழ்வில் எமது மண்ணின் பெருமைகளை எடுத்து கூறுவதற்கு வித்திட்டது. என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுடன் எமது வருங்கால சமூகம் எவ்வாறு பயணிக்கவேண்டும் என்ற நோக்கில் கலை நிகழ்வுகளை ஆரம்பித்திருந்தோம். அதனையும் எதோ நாங்கள் கிராமத்தை இரண்டுபடுத்த நினைப்பதாக கூறி சில விசமிகள் சில போலி பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர், வருகின்றனர்.


இன்று கிராமம் பற்றி கரிசனை கொள்வோர் அல்லது அக்கறை கொள்வோர் எல்லாம் அன்று எங்கு சென்றார்கள் என்று புரியவில்லை. வெளிநாடு வந்ததால்தான் சிலருக்கு ஊரைத் தெரிகின்றது. அன்று சோளங்கன் நூல் நிலையத்தில் இருந்து மட்டைச்சடி என்ற பகுதியில் விவேகானந்தர் நூல் நிலையம் அமைக்கப்பட்டபோது எங்கே போனார்கள்? எம்மை பார்த்து இவர்கள் எந்தவொரு விரலையும் காட்டுவதற்கு அறுகதையற்றவர்கள். 

இன்று ஊரைப்பற்றி ஊளையிடுபவர்கள் ஒரு குழி காணியை நூல் நிலையத்திற்கு தாரைவார்த்தார்களா? அல்லது இன்றுவரை அதனை வழங்க முன்வந்துள்ளார்களா? 5பரப்பு, 9 பரப்பு என்று இன்று எல்லை பிடிக்கும் ஆசாமிகள்தான் செய்தார்களா?  அரசு ஒதுக்கிய நிதியைதன்னிலும் பெறுவதற்கு அன்றைய இளம் சமூகம் பட்ட அவலத்திற்கு ஏதுநிலையை உருவாக்கினார்களா?

சிலரால் பரப்பப்படும் போலி செய்திகளிற்கு விளக்கமளிக்கும் கடமை எமக்கு உண்டு. எம்மால் முன்னெடுக்கப்படும் இணையத்தின் சார்பிலோ அல்லது முகப்புத்தகத்தின் வாயிலாகவோ எந்தவொரு நிதி திரட்டலும் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ மேற்கொள்ளப்படவில்லை. 

இதனை புரிந்து கொள்ளவேண்டும். எழுந்தமானமாக முகவரியற்ற முறையில் மொட்டை துண்டினை வெளியிடும்போது அவதானத்துடன் வெளியிடவேண்டும். ஊரின் பெயரையும் நல் நோக்குடன் இணையத்தில முன் எடுக்கப்படும் கருத்துக்கள் அசிங்கப்படாமல் பார்க்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

சோளங்கன் இணையம்.(www.cholangan.blogspot,com)

No comments:

Post a Comment