Sunday, January 3, 2016

வடமராட்சி பகுதியில் பட்டம் விடுவோரால் நெல்வயல்கள், மின் இணைப்புக்கள் பாதிப்பு!

வடமராட்சி பகுதியில் சிறுவர்கள், இளைஞர்கள், வயது வந்தவர்கள் என பல தரப்பட்டவர்களும் பட்டம் ஏற்றுவதனால் பொது மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.


வயல் வரம்புகளில் நின்று பட்டம் ஏற்றுவதனாலும் வயல்களுக்குள் இறங்கி ஒடுவதனாலும் நெற் பயிர்கள் நாசமாவதுடன், பட்டம் ஏற்றும் நூல்கள் மின் இணைப்புக்கள், தொலைபேசி இணைப்பு கம்பிகளில் சிக்குவதால் அவை துண்டிக்கப்படுகின்றன. இதனால் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்படுவதுடன் வீட்டில் உள்ள குளிர்சாதனபெட்டிகள், தொலைக்காட்சி பெட்டிகள், தொலைபேசிகள், கணனிகள் அடிக்கடி பழுதடைவதாகவும் கூறப்படுகின்றது.

கரணவாய், கரவெட்டி, நாவலர் மடம் போன்ற பகுதிகளிலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. பட்டம் விடுவோர் வயல் வரம்புகள், மின் இணைப்புக்கள் உள்ள இடங்களில் பட்டம் விடுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment