Saturday, December 19, 2015

உற்பத்தின திறனில் கரவெட்டி பிரதேச செயலகம் இரண்டாம் இடம்!!!

அகில இலங்கை ரீதியாக அரச திணைக்களுக்கிடையில் நடத்தப்பட்ட உற்பத்தி திறன் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.


பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நடாளவிய ரீதியில் உள்ள அலுவலகங்களுக்கு இடையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. 

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதில் வைத்தே தேசிய ரீதியில் இரண்டாம் இடத்துக்கான விருது கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது.

இதேவேளை கரவெட்டி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு இந்த போட்டியில் விசேட சான்றிதழை பெற்றிருந்ததுடன் இந்த வருடம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றதோடு இரண்டு தரவட்டச்சான்றிதழையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment