Saturday, December 19, 2015

கரணவாய் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள வீதிகளை புனரமைக்குமாறு கோரிக்கை!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட பல வீதிகள் புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம்  தெரிவித்துள்ளனர். 


குறிப்பாக கரணவாய் கரவெட்டி பகுதியில் 15க்கும் மேற்பட்ட வீதிகள் இவ்வாறு புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாக உள்ளதாகவும், இதனால் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதேசசபை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment