இந்து மக்களின் பாரம்பரிய உற்சவங்களின் ஒன்றான திருவெம்பாவை ஆரம்பித்துள்ள நிலையில் இந்து ஆலயங்களில் உற்சவம் சம்பந்தமாகவும் பிரச்சனைகளும் எழத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் சுன்னாகம் வரியப்பலம் அம்மன் ஆலயத்தில் இன்றைய முதல் நாள் திருவெம்பாவை பூசை தொடர்பான பிரச்சனை யொன்று எழுந்துள்ளது.
குறிப்பாக கடந்த எண்பது வருடங்களாக முதல் நாள் பூசையை செய்து வந்த குடும்பத்தினருக்கு அறிவிக்காமலே பூசையை நிறுத்திவிட்டதாக தற்போது பிரச்சனையொன்று எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பல இந்து ஆலயங்கள் பணம் படைத்தவர்களுக்கு பூசைகளை வழங்கி பணம் உழைப்பதில் நோக்கமாக திருப்பணிச்சபையினர் தர்மகார்த்தா சபையினர் செயற்படுகின்றார்களே அன்றி பழமை எதனையும் பின்பற்றி செல்லும் நிலமையை மாற்றுவதினால் பலத்த குழப்பங்கள் ஏற்படுவதுடன் நீதிமன்றங்கள் நாடிச் செல்லும் நிலமைகளும் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment