அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ள பல அலுவலகங்களில் பணியாளர்களுக்கென குளிர்பதனப் பெட்டியுடன் சமையல் அறை இருக்கும். இதுபோன்ற அலுவலகத்தின் பொதுப் பயன்பாட்டு குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டும் உணவு வகைகள் மற்றும் பால் பாட்டில்கள் அவ்வப்போது திருடப்படுவதுண்டு.
அலுவலகத்தில் உயர்ந்த பணியில் இருக்கும் பலரும் இதுபோன்ற சமயங்களில், ‘என் உணவை நீங்கள் எடுத்தீர்களா?’ என யாரையும் சந்தேகப்பட்டு கேட்டுவிட முடியாது. இந்தப் பிரச்சனையைப்பற்றி வெளியில் பேசிக்கொள்ளவும் முடியாது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ள ஒரு மனிதரின் பூட்டுப் போட்ட பால் பாட்டிலின் படம் ‘ரெட்டிட்’ தளத்தில் நேற்று பகிரப்பட்டிருந்தது.
இந்தப் பிரச்சனையால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட சுமார் பதினெட்டு லட்சம் பேரின் பேராதரவையும் இந்தப் புகைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment