Saturday, November 7, 2015

தொங்கும் கண்ணாடி பாலத்தில் யோகா செய்து அசத்திய பெண்கள்!!!

சீனாவில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய தொங்கும் கண்ணாடி பாலத்தில் 100 பெண்கள் யோகா செய்து அசத்தியுள்ளனர்.


ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ தேசிய பூங்கா பகுதியில் மேல் 980 அடி நீளத்தில் மிகப்பெரிய தொங்கும் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 599 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் பாலம் முழுக்க முழுக்க இரண்டு பக்கமும் தெரியும் வகையில் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இது அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் தைரியத்தை சோதித்து வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ள பாலத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் கீழே தெரியும் பள்ளத்தை பார்த்து நடுங்கிய படியே கம்பிகளை பிடித்தப்படியே சென்றுவருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனை காரணமாக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டு, விரிசல்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த பாலத்தில் சீன யோகா ஆர்வலர்கள் சுமார் 100 பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். பல சுற்றூலா பயணிகள் நடப்பதற்கே அஞ்சும் பாலத்தின் மீது 100 இளம் பெண்கள் பயம் இல்லாமல், யோகா செய்து அசத்தியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment