Saturday, November 7, 2015

முகப்பு வெளிச்சம் இல்லாமல் சென்ற சைக்கில்கள் நெல்லியடி பொலிஸாரால் பறிமுதல்!

இரவு நேரங்களில் முகப்பு வெளிச்சம் (லைற்) இல்லாமல் சென்ற துவிச்சக்கரவண்டிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழன் இரவு இவ்வாறு லைற் இல்லாமல் சென்ற 16 சைக்கில்களை நெல்லியடி பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


இரவு நேரங்களில் லைற் இல்லாமல் செல்லவேண்டாம் என்று ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையிலேயே இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்டுள்ள சைக்கில்களை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதுடன் உரியவர்கள் முகப்பு வெளிச்சம் பூட்டிவிட்டு எடுத்து செல்லுமாறும் பணித்துள்ளனர்.

No comments:

Post a Comment