Saturday, November 7, 2015

வீதியால் சென்ற பெண்ணை கேலி செய்த இளைஞன் பொதுமக்களால் தாக்கப்பட்டார்!

வீதியால் தனியாக சென்று கொண்டிருந்த யுவதியொருவரை தகாதவார்த்தைகளால் கேலி செய்த இளைஞன் பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அல்வாய் மாலுசந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.


தனியா சென்று கொண்டிருந்த யுவதியை பின் தொடர்ந்த இளைஞன் அப்பெண்ணிடம் தகாதவார்த்தைகளை கூறி கேலி செய்தபோதே அவ் பெண் உரக்க சத்தமிட்டு வீதியால் சென்று கொண்டிருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பினார். 

இதனையடுத்து என்ன நடந்தது என்று விபரத்தை பொதுமக்கள் கேட்கவே நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க கூறியதை தொடர்ந்து இளைஞனை கைது செய்து தாக்கியுள்ளதுடன் இவ்வாறான சம்பவங்களில் இனிமேல் ஈடுபடவேண்டாம் என்றும் அவ் இளைஞன் எச்சரிக்கப்பட்டுள்ளான்.

No comments:

Post a Comment