இனிவரும் காலங்களில் தேனீர்சாலைகள், உணவகங்களில் தேனீருக்கு சீனி கலப்பதற்கு தடைவருகின்றது. அதற்கு பதிலாக அருகேயுள்ள பாத்திரம் ஒன்றில் சீனி போட்டுவைக்கமுடியும் என்றும்,தேவைக்கு ஏற்ப சீனியை வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளமுடியும் என்றும் சுகாதார பணிப்பகம் தெரிவித்துள்ளது.
பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் அதிக உப்பு, இனிப்பு, எண்ணெய் அற்ற உணவு பண்டங்களையே பரிமாறப்பட வேண்டும் என்றும் சுகாதார பணிப்பகம் விடுத்துள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சிறுநீராக நோயாளர்கள் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு கடந்த 14..11.2015 முதல் அமுலுக்கு வருகின்றது. சீனி பாவனையால் நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்புக்களால் பெருமளவில் மக்கள் பாதிக்கப்படுவதால், எதிர்காலத்தில் நோயற்ற நாட்டை கட்டிமைக்கும் திட்டத்துடனேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாகவும் சுகாதார பணிப்பகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment