மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்ததில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முற்பகல் 10மணியளவில் வடமராட்சி மண்டான் உப்பு றோட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் கரவெட்டி மத்தணியைச் சேர்ந்த குமாரசுவாமி-நிறோஜன் (வயது-27) என்ற இளைஞரே இவ்வாறு எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் மண் டான் உப்பு றோட் ஊடாக மோட்டார் சைக்கிளில் தனியாக பயணித்துள்ளார். இந் நிலையிலேயே அவ் இளைஞரது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்துள்ளது.மோட்டார் சைக்கிளில் பிடித்த தீ இளைஞரையும் தாக்கியது.
எனினும் இளைஞர் மோட்டார் சைக்கிளினை நிறுத்தி விட்டு நெருப்பு பிடித்த உடலுடன் தன்னைக் காப்பாற்றுமாறு வீதி எங்கும் ஓடியுள்ளார்.
இதேவேளை இவ்வீதியால் சென்ற கிராம சேவையாளர் ஒருவர் இவ் இளைஞரை காப்பாற்றி பொதுமக்கள் உதவியு டன் தீயை அணைத்துள்ளார்.
எனினும் இளைஞர் மோச மான நிலையில் எரிகாயங்குட்பட்டிருந்தார். உடனடியாக அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளதாகவும் குறித்த இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கட மையாற்றி வருகின்றார் என வும் தெரிய வருகின்றது. தனது கடமைக்காக சென்றிருந்த வேளையே இச் சம்பவம் இடம் பெற்றது எனவும் தெரிவிக்கப் படுகிறது.

No comments:
Post a Comment