நேற்றையதினம் மண்டான் உப்புரோட் பகுதி ஊடாக சென்று கொண்டிருந்தபோது தீடிர் என்று மோட்டார் சையிக்கில் தீபிடித்ததில் எரிந்ததில் படுகாயமடைந்த இளைஞன் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சையிக்கிலில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சையிக்கில் தீபிடித்ததில் படுகாயமடைந்த கரவெட்டி யாக்கரு பகுதியை சேர்ந்த குமாரசாமி நிரோஜன் என்ற 27வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் பொதுமக்களின் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிரோஜன் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment