Tuesday, October 13, 2015

கட்டுரை, கவிதை, பேச்சு போட்டியிலும் கரணவாய் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை!



கரவெட்டி பிரதேச செயலகத்தினால் வடமராட்சி கரவெட்டி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற முதியோர், சிறுவர், மாற்றுவலுவுடையோர் தின போட்டியில் கரணவாய் மகாவித்தியாலய மாணவ மாணவிகள் போட்டியிட்டு முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.


முதியோர்களுக்கான பேச்சு போட்டியின் கீழ்பிரிவில் 3ம் இடத்தை நி.ஹரினி என்ற மாணவியும், கட்டுரை கீழ்பிரிவில் 2ம் இடத்தை வி.கஸ்தூரி என்ற மாணவியும், கவிதை கீழ்பிரிவில் வி.கேமிதா என்ற மாணவி 3ம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளதுடன், 

சிறுவர் தின போட்டியின் கட்டுரை ஆரம்ப பிரிவின் மத்திய பிரிவில் வி.அருள்ராஜ் என்ற மாணவன் 3ம் இடத்தையும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.

கரவெட்டி கோட்டத்துக்குள் இடம்பெற்ற மாணவ, மாணவியருக்கான கட்டுரை, பேச்சு, கவிதை போட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள நமது பள்ளியின் மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், கல்வி, விளையாட்டு, கலைபிரிவுகளில் மேன்மேலும் சாதனைகளை நிலைநாட்டி கல்வி கற்கும் பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்ற பெற்றோருக்கும் பெருமையை தேடி கொடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளை வேண்டிகொள்கின்றோம்.

நமது பாடசாலையை அண்டிய கிராமங்களில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளை நமது கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் சேர்க்க அஞ்சி நகரத்தில் உள்ள பெரும் பாடசாலைகளிற்கு அனுப்பி கல்வி போதித்துவரும் நிலையில்,  

எம்மாலும் முடியும் என்பதை நமது கிராமத்து பாடசாலையிலேயே(கரணவாய் மகாவித்தியாலயத்தில்) கல்வி கற்று சாதனையை நிலைநாட்டும் மாணவ, மாணவியருக்கும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

No comments:

Post a Comment