கடந்த திங்கள்கிழமை(26.10.2015) அன்று நெல்லியடி வதிரி வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ் திருடன் கொழும்பு கந்தனை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த நகைகளை விற்க்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர் குறித்த தகவல் நெல்லியடி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லியடி பொலிஸார் நகைக்கடை உரிமையாளரை அழைத்துச் சென்று நகைகளை அடையாளம் கண்டு கொண்டதுடன் சந்தேக நபரையும், திருடப்பட்ட நகைகளையும் பெற்றுக்கொண்டு நெல்லியடி திரும்பினர்.
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் மேற்படி நபர் நேற்றையதினம் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமாறு பருத்தித்துறை நீதிபதி கணேசராஜா உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment