தீர்த்தக் கேணியில் நீராடிய ஆலயக் குருக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கரணவாய் முதலைக்களி முருகன் ஆலய தீர்த்தக் கேணியில் இடம் பெற்றுள்ளது.
இதில் கரணவாய் தெற்கினைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சிவஸ்ரீ கனகசபை தியாகராஜக்குருக்கள் (வயது -86) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
ஆலயப் பூசைக்காக அதிகாலை வேலையில் கேணியில் இறங்கிக் குளித்துள்ள பிரஸ்தாப குருக்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளார்.
காலையில் கோவிலுக்கு சென்ற ஆலய பரிபாலனசபையினர், குருக்கள் கேணியில் சடலமாக மிதந்துள்ளதைக் கண்டு நெல்லியடிப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment