Monday, September 1, 2014

சிறுவர்களின் கண் பார்வையை மங்க வைக்கும் கெரட்ரோகோனஸ் நோய்

புலனு­றுப்­பு­களில் கண் மிகவும் பிர­தான உறுப்­பாக இருக்­கின்­ற­மைக்கு காரணம் இந்த உலகை எமக்கு காட்­சிப்­ப­டுத்­து­வது கண் என்­பதால் தான். கண் இல்­லாது விட்டால் வாழ்க்­கையே இருண்டு போய் விடும். அதிலும் ஏற்­க­னவே பார்வை இருந்த ஒருவர் பார்­வையை இழந்து விட்டால் சொல்லவும் வேண்­டுமா சிறு­வர்­களின் பார்வையை மெல்ல பாதித்து குரு­டாக்கி விடக்­கூ­டிய ஆபத்­தான ஒரு நோய் தான் கெரட்­ரோ­கோனஸ் (keratoconus)நோயாகும்.

 
பெரி­தாக வளரும் பிள்­ளை­களில் ஏற்­படும் இந்த நோய் கண்ணின் மணி­யாக கரு­விழி மென்­மை­ய­டை­வதால் ஏற்­ப­டு­கி­றது. இதற்­கான சரி­யான காரணம் இனங்­காணப்படா­விட்­டாலும் இந்­நோயை ஆரம்ப நிலையில் இனங்­கண்டால் குணப்­ப­டுத்த முடியும்.
 
நன்­றாக படித்து கொண்­டி­ருந்த சிறு பிள்­ளைகள் படிப்பில் பின்­தங்கி விடு­வ­தற்கு இந்­நோ­யினால் ஏற்­ப­டு­கின்ற பார்வை குறை­பாடு ஒரு கார­ண­மாகும். பார்வை குறை­பாட்­டிற்கு பல்­வேறு கார­ணங்கள் இருக்­கின்­றன.
 
கண் வில்லை(lens) இயல்­புக்கு மாறான அளவில் இருக்கும் போது அதன் குறைப்­பாட்டை பரி­சோ­தித்து அறிந்து அதற்­கான தீர்­வாக பொருத்­த­மான மூக்கு கண்­ணா­டியை அணி­வதை அறி­வீர்கள்.
 
விம்பம் விழித்­தி­ரையில் சரி­யாக விழாத பட்­சத்தில் பார்வை வில்­லைகள் மூலம் அதை விழித்­தி­ரையில் சரி­யாக வடி­வ­மைத்து சீர் செய்­யப்­ப­டு­கின்­றது. எனினும் இவ்­வா­றான குறை­பாடு பெரும்­பாலும் 40 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளி­டையே ஏற்­ப­டு­கி­றது. சில வேளை­களில் சிறு­வர்­க­ளுக்கும் ஏற்­ப­டலாம். சிறு­வர்­களை பொறுத்­த­வரை விட்டமின் A குறை­பாட்­டினால் ஏற்­படும் கெரரோ மலே­சியா (Kerato malesia) பார்வையை பாதிக்கக்கூடியது என்பதை அறிந்திருப்பீர்கள். ஒரு­வ­ரது உணவில் போதி­ய­ளவு விட்டமின் A கிடைக்­காத பட்­சத்தில் கண்ணின் முன்­பு­ற­மாக உள்ள வெண்­விழி (Conjuntiva) கரு­விழி (Cornia) என்­பன பாதிப்­புக்குள்­ளாகி பார்வை குறை­பாடு ஏற்­ப­டு­கின்­றது. விட்டமின் A நிறைந்த மீணெண்னை, கரட், மீன் முத­லான உண­வு­களை உட்­கொள்­வதன் மூலம் இக்­கு­றை­பாடு ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடியும். ஏற்கனவே குறைபாடு இனங்காணப்பட்டுள்ளவர்களில் விட்டமின் A மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளில் இக்குறைபாடு ஏற்படுவதை தவிர்ப்­ப­தற்கு சிறுவர் கிளி­னிக்கில் செறி­வான விட்டமின் A மாத்­தி­ரைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.
 
கண்­களில் ஏற்­படும் காயங்கள், தொற்­றுக்கள் என்­ப­வற்­றாலும் கண் பார்வை பாதிப்பு ஏற்­படும் சாத்­தியம் உண்டு. கண்­களில் நோய் ஏற்­படும்போது கட்டாயம் உங்கள் வைத்­தி­ய­ரிடம் ஆலோ­சனை பெறுங்கள். ஆரம்­பத்தில் குறிப்­பிட்ட கெரட்­ரோ­கோனஸ் நோய் பற்றி பார்ப்போம்.
 
படிக்கும் குழந்­தை­க­ளுக்கும் சிறு­வர்­க­ளுக்கும் திடீரென்று ஏதோ பார்வைக் கோளாறு என்று வைத்­தி­ய­ரிடம் கூட்­டிக்­கொண்டு வரு­வார்கள். இவ்­வா­றான சிறு­வர்­களை கண் வைத்­திய நிபுணர் பரிசோ­திக்கும் போது சில­ருக்கு இந்நோய் இருப்­பது கண்­டு­ பி­டிக்­கப்­ப­டு­கின்றது. இவர்­களின் கருவி­ழி­களின் வடிவம் அசா­தா­ர­ண­மாக இருப்­பதன் மூலம் தான் இந்நோய் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. பிறப்­பி­லேயே பல­மில்­லாத கருவிழிகள் உள்ள குழந்­தைக்கே இந்­நிலை ஏற்­ப­டு­கி­றது.
 
இவ்­வா­றான குழந்­தைகள் வளரும் போது கரு­வி­ழி­களின் வடி­வ­மைப்பு மாறு­ப­டு­கி­றது. இதனால் பார்க்கும் பொருள் கடும் வெளிச்­ச­மா­கவும் சரி­யான விம்­பத்தை பெற­மு­டி­யா­மலும் இருக்கும். இது மெது­மெ­து­வாக ஏற்­ப­டு­வதால் ஆரம்­பத்தில் இதை அலட்­சி­யப்­ப­டுத்தி விடு­வார்கள்.
 
கண்­களில் அரிப்­பா­கவும் சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவ்­வா­றான நிலை ஏற்­பட்­ட­வர்கள் கண்­களைப் போட்டு கசக்கக் கூடாது. கண்ணில் வேறெந்த நோய்தொற்று, அலர்ஜி என்­பன ஏற்­படும்போது கூட கசக்கக் கூடாது. சுத்­த­மான தண்ணீர் கொண்டு கழு­வலாம்.
 
கண் வைத்­தியர் ரோபோ கிறாபி (tobo graphy) பரி­சோ­தனை மூலம் உங்கள் கண்­களில் கெரட்­ரோ­கோனஸ் இருப்­பதை உறு­தி­செய்வார்.
இந்­நோ­யினால் கரு­வி­ழி­களின் வடிவம் மாறி­யி­ருப்­பதை துல்­லி­ய­மாக கண்­ட­றிய முடியும். இன்னும் சில பர­ிசோ­த­னைகள் மூலம் நோயின் பாதிப்பின் அளவை சரி­யாகக் கண்­ட­றிந்து இதற்கு ஏற்­ற­வாறு சிகிச்சை அளித்­திட முடியும்.
 
நவீன கரு­விகள் மூலமும் உப­க­ர­ணங்கள் மூலமும் நனோ தொழி­ல்நுட்­பத்தை பயன்­ப­டுத்­தியும் கரு­வி­ழியை முப்­ப­ரி­மா­ணத்தில் (Three diamension) பார்த்து பாதிப்பின் அளவை துல்­லி­ய­மாக கணிக்கும் வழி முறைகள் நடை­மு­றைக்கு வந்­துள்­ளன. இதனால் மிக ஆரம்ப நிலை­யி­லேயே நோயை இனங்­காண முடியும்.
 
நோய் தீவி­ர­ம­டையும் முன்னர் ஆரம்ப காலத்தில் கண்­டு­பி­டித்து விட்டால் சிகிச்­சை­ய­ளிப்­பது சுலபம். கண் வைத்­தி­யரின் தொடர் கண்­கா­ணிப்பில் (கிளினிக்) இடை­யி­டையே கண்­ணாடியை மாற்ற வேண்­டி­யி­ருக்கும். பாதிப்பு சற்று அதி­க­மாக இருப்பின் contect lens பாவிக்­கப்­ப­டு­கி­றது. பிரத்­தி­யேக ஒளியைச் செலுத்­தியும் சீர்செய்யும் முறை­யுண்டு. ஆனால் கோணியா மிக மோச­மாக பாதிப்­ப­டைந்­தி­ருப்பின் பார்வை மிக மோச­ம­டை­வ­துடன் முன்­கு­றிப்­பிட்ட சிகிச்சைகள் பலனளிக்காது.
 
இவர்களில் விழித்திரை மாற்று (Corneal Tranplantasion) சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும். இதற்கு தானமாக கண்களைப் பெற்றே சிகிச்சையளிக்க முடியும். உயிருடன் இருக்கும் ஒருவர் தனது கண்களை தானமாக, தான் இறந்ததும் வழங்க ஏற்பாடு செய்ய முடியும்.குறிப்பிட்ட சில மணிகளுக்குள் இறந்தவரின் கண்களைப் பெற்று பாதுகாத்து இன்னொருவரின் கண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.
 

No comments:

Post a Comment