Friday, November 29, 2013

நிலாவில் நூக்கல், துளசி செடிகளை வளர்க்க நாசா திட்டம்


நிலாவில் மனிதன் கால் தடம் பதித்ததில் இருந்தே அதில் மனிதன் வாழ முடியுமா என்ற சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் வரும் 2015ஆம் ஆண்டு வாக்கில், நிலாவில் நூக்கல் மற்றும் துளசி செடிகளை வளர்த்து, மனிதன் நிலாவில் வாழ முடியுமா, தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா என்பது குறித்து சோதனை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளில் நிலாவுக்குச் சென்று அங்கு தரைப் பகுதியில் 5 முதல் 10 நாட்களுக்குள் வேகமாக வளரும் செடிகளான துளசி, நூக்கல் விதைகளை மண்ணில் புதைத்து எடுத்துச் சென்று, அதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து பரிசோதிக்க உள்ளனர். இந்த விதைகளை சுற்றி கேமராக்கள், உணர்வறியும் கருவிகள், செடியின் தன்மையை உடனுக்குடன் அளிக்கும் எலக்ட்ரானிக் கருவி போன்றவை வைக்கப்பட்டு, இங்கிருந்து கண்காணிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் செடிகளின் வளரும் தன்மையையும், மனிதன் நிலாவில் வாழ முடியுமா என்பது குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment