சுன்னாகம் கந்தரோடை அறிஞர் ஐயண்ணா சனசமூக நிலையம் முன்பாக மாலை வேளையில் கூடுகின்ற இளைஞர்கள் கும்பலால் அப்பகுதி மக்களும் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி சனசமூக நிலையத்திற்கு முன்பாக கூடி நிற்கின்ற இளைஞர்கள் தனியார் கல்வி நிலையங்களிற்கு சென்று விட்டு திரும்பும் மாணவிகளை கேலி செய்வதாகவும் பாதிக்கப்படுகின்ற மாணவிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மது போதையில் நிற்கும் சிலர் வீதியால் பயணிக்கும் பாதசாரிகளை வம்பிற்கு இழுப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக குறித்த சனசமூக நிலையத்திற்கும் சனசமூக நிலைய மேற்பார்வை உத்தியோகத்தருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் எந்த தரப்பும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment