சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயை குணப்படு த்த முடியாது. அது மனிதனின் உடலில் தொற்றிய தினம் முதல் 5 வருடங்களில் அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் பொதுவாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
புற்றுநோய் உடலில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பர வுவதை தடுப்பதற்கு கதிரியக்கத்தினால் சுடுவதும் சத்திரசிகி ச்சை மூலம் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றி விடுவதும் உண்டு. எவ்வளவுதான் சிகிச்சைகள் செய்தாலும் அதனை முழுமையாக குணப்படுத்தி மனித உயிர்களை காப்பா ற்றுவது முடியாத காரியம் என்று பொதுவான நம்பிக்கை மன தில் எழுவதுண்டு.
ஆயினும் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் இருந்து புற்று நோயாளர்களில் இறப்பவர்களைவிட உயிர் பிழைப்பவர்களே அதிகமென தெரியவந்துள்ளது. புற்றுநோயாளர்களுக்கு மன தைரியத்தை வழங்குவதை நோக்காகக் கொண்டு புற்றுநோயில் இருந்து குணமடைந்தவர்கள் தொடர்பான சர்வதேச தினம் அனுஷ் டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது. புற்றுநோயில் இருந்து குணமடைந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் தொடர்பான நிகழ்வு இலங்கை மருத்துவ சம்மேளனத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
புற்றுநோயை முன்கூட்டியே அடையாளம் காண்பதன் மூலம் அத ற்கு சிகிச்சை அளிப்பது இலகுவாக இருப்பதுடன் முற்றாக குண மாக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றது. இலங் கையில் வருடாந்தம் 15 ஆயிரம் புதிய புற்றுநோயாளர்கள் வைத் தியர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றனர். நகரங்களில் மட்டு மன்றி, கிராமங்களிலும் பெருமளவினர் புற்றுநோயினால் பாதிப் புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இலங்கையில் கூடுதலாக வாய்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவையே காணப்படுகின்றன. இவற் றில் அநேகமானவற்றை முன்கூட்டியே அறிந்திருந்தால் அதற்கு தொடர்ச்சியாக சிகிச்சையளித்து குணமாக்க முடியும். புற்று நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படுவதனால் எவ்வளவுதான் சிறந்த சிகிச்சையளித்தாலும் அவை பலனில்லாமல் இறுதியில் அவர்கள் மரணிக்கிறார்கள்.
புற்றுநோயாளர்களுக்கு புற்றுநோயை குணப்படுத்த முடியுமென்று தைரிய மூட்டுவதற்கான பயிற்சிப் பாசறைகள் சுகாதார அமைச் சின் அனுசரணையின் கீழ் நாடெங்கிலும் நடத்தப்படுகின்றன.
புற்றுநோயாளர்களுக்கு விசேட மருந்துகளை பெற்றுக் கொடுப்பதற் காக அரசாங்கம் வருடமொன்றுக்கு 1000 மில்லியன் ரூபாவை செலவிடுவதோடு ஏனைய செயற்பாடுகளுக்கு மேலும் 1500 மில் லியன் ரூபாவை செலவு செய்கிறது. இலங்கையில் அதிகமாக வாய் புற்றுநோயே ஏற்படுகின்றது. சுருட்டு புகைத்தல், சிகரட் புகைத்தல், சுண்ணாம்பை பூசி வெற்றிலை மெல்லுதல் போன்ற வையே வாய்புற்றுநோய் ஏற்படுவதற்கான பிரதான காரணங்களாகும்.
பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய் பொதுவாக செல் வந்த அல்லது நடுத்தர வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கே அதி கமாக ஏற்படுகிறது. தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு தங்கள் கட்டான உடம்பு அவலட்சணமாகிவிடும் என்ற கார ணத்தினால் தாய்ப்பாலை கொடுப்பதற்கு பதில் புட்டிப்பாலை இவர்கள் கொடுப்பவர்களாவர். தங்கள் பிள்ளை அழும்போது அதற்கு தாய்ப்பாலை கொடுக்காமல் புட்டிப்பாலை கொடுக்கும் போது அந்தப் பெண்களின் உடலில் இயற்கையாகவே அமைந் துள்ள தாய்ப்பாசத்தினால் பால் சுரந்து வெளியேறுவதுண்டு.
பால் சுரக்கும் போது அவர்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதனால் இந்தப் பெண்கள் வைத்தியர்களை நாடி பால் சுரப்பதை தடுப்ப தற்கான ஊசி மருந்துகளை போடுகிறார்கள். இத்துடன் தோற்ற த்தை அழகாக வைத்திருப்பதற்காக சில பெண்கள் மார்புக் கச் சையை இறுக்கமாக கட்டுகிறார்கள். இவ்விரு காரணங்களினால் தான் மார்பில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கட்டிகள் வளர் கின்றன என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
பெண்களின் கழுத்தில் ஏற்படும் புற்றுநோயை சாதாரண வினாகிரி யின் மூலம் குணப்படுத்தலாம் என்று வைத்திய நிபுணர்கள் இப் போது கண்டுபிடித்துள்ளார்கள். இந்தியாவில் மாத்திரம் வருடா வருடம் இந்த புற்றுநோயினால் மரணிக்கும் 73 ஆயிரம் பேரை தக்க சிகிச்சையளிப்பதன் மூலம் காப்பாற்றியிருக்கலாம் என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
செல்வந்த நாடுகளில் இத்தகைய புற்றுநோய்களினால் இறப்பவர்க ளின் எண்ணிக்கையை 80சதவீதத்தினால் குறைத்திருக்கிறார்கள். ஆயினும் இந்தியா உட்பட பல வளர்முக நாடுகளில் உள்ள பெண்களுக்கு இந்த புற்றுநோய்களுக்காக வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதற்கு பணமின்மையினால் அவர்கள் மரணிக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் குணமாக்கலாம் அல்லது அது விரிவடைவதை தவிர்த்து அந்த மனிதன் தனக்கு பிடித்திருக் கும் புற்றுநோயுடன் பல ஆண்டுகாலம் உயிர்வாழ்வதற்கு உத் தரவாதம் அளிக்கக்கூடிய வகையில் இன்று வைத்திய சிகிச்சை கள் முன்னேற்றம் கண்டுள்ளன.
இனிமேலும் மனித குலம் புற்றுநோயை ஒரு நோயாக நினைக்கக் கூடாது. அதுவும் சாதாரண காய்ச்சல், இருமல், சளி சுரம் என் பன போன்ற உணர்வுடன் மக்கள் அதைப்பற்றி அஞ்சாமல் உட னடி சிகிச்சை எடுத்தால் நிச்சயம் ஓரிரு ஆண்டுகளில் புற்று நோயை பூரணமாக குணப்படுத்த முடியும்.
No comments:
Post a Comment