இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் இத்தனை இளம் வயதிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு திரிவதைப் பார்க்க முடிகிறதல்லவா! சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம். இன்றைக்கு மட்டும் மிக இளம் வயதிலேயே கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது. அவுஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி.
4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்பூட்டுகிறது. அதாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போதுமான நேரத்தைச் செலவிடாததே இந்த பார்வைக் குறைபாடின் காரணம் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.
மருத்துவ மொழியில் சொல்லவேண்டுமெனில், எட்டு வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில் வளர்ச்சியடையும் மயோபியா சரியான அளவில் இல்லாததே இந்த குறைபாட்டுக்குக் காரணம். குழந்தைகள் சிறுவயதில் வெளியே ஓடி விளையாடுவதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி அதிர்ச்சியுடன் அறிவிக்கிறது. கண்ணின் கருவிழி சரியான அளவில் இருப்பதற்கும், ஒழுங்கான வடிவில் இருப்பதற்கும் இயற்கை வெளிச்சம் மிக மிக அதிகம் என்பது அந்த ஆராய்ச்சி அடித்துச் சொல்லும் செய்தியாகம்.
No comments:
Post a Comment