Tuesday, July 17, 2012

துயர் பகிர்வு அறிவித்தல்


  அன்னை மடியில்: மார்கழி 29, 1995                   காலனின் பிடியில்: ஆடி 13, 2012
                        
செல்வி லக்ஷ்மிகாந்தன் - அனுஷா
(கனடா ஸ்காபுரோ)

கனடா ஸ்காபுரோவை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட செல்வி லக்ஷ்மிகாந்தன் அனுஷா அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அன்னார் சோளங்கன் கரணவாய் மேற்கைச் சேர்ந்த லக்ஷ்மிகாந்தன் சிறுப்பிட்டியை சேர்ந்த சந்திரலீலா ஆகியோரின் அன்பு புதல்வியும், அனுஷனின் ஆருயிர் சகோதரியும்,

காலம் சென்ற செல்லத்துரை, மீனாட்சிபிள்ளை,  காலம் சென்ற சின்னத்தம்பி, தெய்வானை ஆகியோரின் பேத்தியும், பரமேஸ்வரி ஜெகலோகராஜா(சுவிஸ்), பரமேஸ்வரன் மகேஸ்வரி(இலங்கை), மாசிலாமணி நாதன் (சுவிஸ்),  செல்லத்துரை-ராதாகாந்தன்(இலங்கை) ஆகியோரின் பெறாமகளும்.

கமலாதேவி கங்காதரன்(இலங்கை), கணேசகுமார் மஞ்சுளாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் மருமகளும், குமாரதாஸ்(இலங்கை), சதீஸ்வரதாஸ்(இலங்கை), சாயிதேவதாஸ்(இலங்கை), கஜானனி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,

கானப்பிரியா(இலங்கை), யானுயா(சுவிஸ்), அசோயன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்), கார்த்திகா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

அதீசன்(ஜேர்மனி), வின்சன்(ஜேர்மனி), விமல்(இலங்கை), ஜெயமுகன்(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் பூதவுடல்:  Highland Funeral Home, 3280 Sheppard Avenue,E.
Scarborough, ON, M1T 3K3
  என்ற முகவரியில் 20.07.2012( வெள்ளிக்கிழமை) மாலை 4:00 மணி முதல் 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை(22.07.2012) காலை 8:00 மணி தொடக்கம் 11:00 மணிவரை இறுதிகிரிகைகள் இடம்பெற்று பின்னர் தகனம் செய்வதற்காக பின்வரும் முகவரியில் அமைந்துள்ள இடத்திற்கு எடுத்து செல்லப்படும்.


Bowmanville Crematorium ,1200 Haines St, Bowmanville, ON L1C 3K5
தகவல் குடும்பத்தினர்:
செ.லக்ஷ்மிகாந்தன்(கனடா):416-431 2515, 416-845 7103
கங்காதரன் (இலங்கை: 094-212226891
ராதாகாந்தன்(இலங்கை); 094-777563678
பரமேஸ்வரன் மகேஸ்வரி (சிறுப்பிட்டி) 094-212230503, 094-213219279

1 comment:

  1. http://thinam.com/joomla-overview/2010-06-07-20-05-55/702-2012-07-18-08-04-38.html

    ReplyDelete