கரணவாய் மேற்கு சோளங்கன் மற்றும் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட லக்ஷ்மிகாந்தன்-சந்திரவதனா ஆகியோரின் அன்பு செல்வி அனுஷா அவர்கள் நேற்றையதினம் சிங்கப்ப+ரில் காலமானார்.
கனடாவில் இருந்து தாயகத்தில் வசித்துவரும் உறவினர்களை பார்வையிடுவதற்காக அவரது அம்மாவுடன் தாயகம் சென்றபோது சிலாபத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நினைவிழந்த அனுஷாவிற்கு சிலாபம், கொழும்பு, சிங்கப்ப+ர் என பிரபல வைத்தியர்களின் துணையுடன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்றையதினம் எம் எல்லோரையும் விட்டு பிரிந்துள்ளது என்ற துயர் செய்தியை எமது ஊரின் உறவுகளோடு மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இத்துயர் சம்பவம் தொடர்பான விபரம் தொடரும்.....
No comments:
Post a Comment